ஜூன் 6, 2025 நிலவரப்படி தங்க விலை மார்க்கெட் ஆனது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காணப்படுகின்றது. அதாவது நேற்றைய மார்க்கெட் விலை படியே இன்றும் களம் இறங்கியுள்ளது. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.9,960. இது நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதன் ஒரு பவுன் விலை ₹. 79,680. எனினும் பொதுவாக மக்களிடையே இது அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது பத்தாயிரத்தை தாண்டும் என்று பரவலாக பேசப்படுகின்றது.
அதேபோல் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.9,130. இதன் ஒரு பவுன் விலை ₹.73,040. மாறாக வெள்ளியின் விலை ஒரு கிராம் 3 ரூபாய்க்கு நேற்றைய மார்க்கெட் விலையை விட கூடுதலாக விற்கப்படுகின்றது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹. 117. வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே சராசரியாக உயர்ந்து கொண்டே செல்கின்றது. தங்கத்தைப் போல் வெள்ளியும் எப்பொழுது உச்சம் தொடும் என்ற முனைப்பில் மக்கள் வெள்ளியை ஆர்வமாக சேகரிக்க தொடங்கி உள்ளனர்.