அரசு ஊழியர்களுக்கான அதிர்ஷ்ட மழை!! ஸ்டாலினின் பழைய ஓய்வூதிய திட்டம்!!

Stalin's old pension scheme!!

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில்  பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பின்னால் சில மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

திரிபுரா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பின் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள், ஆசிரியர்கள், சங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பழைய ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 2021 திமுக ஆட்சிக்கு வந்த போது. 309 வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் என அறிவித்திருந்தது. அதன் பின் கொரோனா நெருக்கடிகள், நிதிநிலை போன்ற காரணங்களால் இந்த திட்டம் அமல்படுத்தவில்லை.

2026 சட்டமன்ற தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் திருமண நிதியுதவி, அரசு ஊழியர்களுக்கான இழப்பீடு போன்ற ஒன்பது அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்க விரும்பும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது.

மாதத்திற்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிடின் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்குவது குறித்த  தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அரசு ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.

அரசு ஊழியர்களின் ஆதரவு திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் மேலும் அரசு ஊழியர்கள் தேர்தலை குறிவைத்து அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் செப்டம்பர் மாதத்திற்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்றும் தலைமையில் செயலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram