தமிழக விவசாய நிலங்களில் சூரிய மின் நிலையங்கள்!!விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பு!!!

விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின் நிலையங்களை நிறுவுவதற்கான முன் முயற்சிகள் தமிழகத்தில் புதிய ஆற்றலுடன் துவங்கியுள்ளன. பிஎம் குசும் திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த மின் நிலையங்களை அமைக்க, 3 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், அதன் மூலம் 1 மெகாவாட் மின் நிலையம் கட்ட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை குத்தகைக்கு வழங்க விரும்பினால், அந்த நிறுவனங்களால் உரிய தொகை வழங்கப்படும் என உறுதி அ ளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக, விவசாயிகள் நேரடியாக மின் நிலையம் அமைக்க விரும்பினால் அதற்கும் அனுமதி கிடைக்கும். மின் நிலையங்களில் தயாராகும் மின்சாரம், 1 யூனிட் 3.28 ரூபாய்க்கு மின் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் விவசாயிகளுக்கு நிலத்தை உபயோகித்து புதிய வருமானம் கிடைக்கும். அதே சமயம், தொழில் நிறுவனங்களும் பங்கேற்று நிலத்தை குத்தகை பெற வாய்ப்பு உண்டாகும். அதற்கிடையில், மின் வாரியத்துக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதால், பொது மக்களுக்கும் பயன்பாடு உண்டு என அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎம் குசும் திட்டத்தின் கீழ் 11 கிலோ வோல்ட் மற்றும் 22 கிலோ வோல்ட் மின் பாதைகளுக்கு அருகிலுள்ள நிலங்களில் சூரிய மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram