பாகிஸ்தானின் அப்பாவி மக்களை பாதிக்கும் சிந்து நதி திட்டம்!! இந்திய அரசு திட்டவட்டம்!!

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் திட்டத்தை இந்திய அரசு தடை செய்து இருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் பதில் தாக்குதலான சித்தூர் நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் முகாம்கள் அளிக்கப்பட்டு இருந்தன. தடை செய்யப்பட்ட சிந்துநதி நீர் திட்டத்திற்கு ஏற்கனவே பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பாகிஸ்தானின் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அந்நாட்டு அப்பாவி மக்களும் பாதிக்கப்படும்படி, இந்திய அரசு சிந்து நதி நீர் திட்டத்தை தடை செய்யக்கூடாது என்று வேண்டி கேட்டுள்ளது.

சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் சையத் அலி முர்தாஷா நதிநீர் திட்ட தடை குறித்து மத்திய நீர்வளத்துறை, வெளியுறவுத்துறை ஆகியவற்றிற்கு தொடர்ந்து நான்கு முறை கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு இந்திய அரசு, பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்கும் வரை இந்த நதிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆகவே பாகிஸ்தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக உலக வங்கியை நாடி இந்த பிரச்சனையை எடுத்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அங்கு தெரிவித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. இந்திய அரசு பாகிஸ்தான் அந்நாட்டு தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வரும் வரை நதிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று உறுதிப்பட எடுத்துரைத்துள்ளது. சிந்தூர் பதிலடிக்கு பிறகு கேட்ட போதும், இந்திய அரசு தனது முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram