வெட்கங்கெட்ட நபர் கமல்ஹாசன்!! ஹெச்.ராஜா ஆவேசப் பேச்சு!!

H. Raja scolded kamal for MP sheet

புதுக்கோட்டையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் எச்.ராஜா. அவர் நாளை பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வர உள்ளதை பற்றி எடுத்துரைத்திருந்தார். அவர் ஏற்கனவே நான் கூறியது போல், அமித்ஷா வந்தார் கண்டார், வென்றார்.

 

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற எண்ணத்தை அடியோடு அழித்திடுங்கள் என்று சட்டமன்றத் தேர்தலை நோக்கி அவர் பேச்சு அமைந்திருந்தது. மேலும், மத்திய கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்காதது எவ்வளவு பெரிய ஆணவம்! என்று திமுக அரசை வன்மையாக கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ராஜ்யசபா தேர்தலுக்காக கமல்ஹாசன் நேற்று மனு தாக்கல் செய்ததை குறித்து செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அதற்கு அவர், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது, இதே திமுக ஆட்சியை வன்மையாக எதிர்த்து, நான் ஒருபோதும் அதில் இணைய மாட்டேன் என்று உரக்கச் சொல்லி இருந்தார். அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாமல், தற்சமயம் ராஜ்யசபா எம்பி சீட்டுக்காக அதே திமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளார்.

அவர் ஒரு வெட்கங்கெட்ட மனிதர். அவரைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பதும் அநாகரிகம். அதற்கு நான் பதில் உரைப்பதும் அநாகரிகம் என்று அவரை வன்மையாக சாடியுள்ளார். கட்சி ஆரம்பிக்கும் போது இப்பொழுது கூட்டணி அமைத்துள்ள திமுகவை வன்மையாக எதிர்த்தவர் தற்பொழுது ஒரு எம்பி சீட்டுக்காக டார்ச் லைட் சின்னத்தை அடகு வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram