நியூ யார்க் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரை ஒற்றுமையாக இருந்த ட்ரம்பும் மஸ்க்கும் தற்போது எதிரிகளாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியாக எலானுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டாலும், அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை தர மாட்டேன் என்று மிரட்டியுள்ளார் எலான்.
ட்விட்டர் பக்கத்திலிருந்து ட்ரம்பின் அக்கவுண்ட் நீக்கி இருந்த நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அந்த சமயத்தில் இருந்து நண்பர்களாக இருந்தனர். தொடர்ந்து ட்ரம்புக்கு தேர்தலிலும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்தார். X நிறுவனம் மூலமும் பிரச்சாரத்தை மேற்கொண்டு பல கோடி ரூபாய்களை செலவிட்டு ட்ரம்பை அதிபராக தேர்தலில் வெற்றி பெற செய்தார்.
அதிபர் ஆன பின்னர் அரசு நிர்வாக செலவை குறைக்கும் திறனின் மேம்படுத்தும் டாட்ஜின் சிறப்பு குழுவின் தலைவராக நியமித்தார் ட்ரம்ப். ஒற்றுமையாக இருந்த நட்பின் தற்போது விரிசல் விழுந்து எலான் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பல கோடி ரூபாயை நிறுத்தினால் அரசுக்கு செலவு குறையும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதை எல்லாம் மாஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் கோபமடைந்த டிரம்ப் எலனுக்கு வழங்கப்படும் அரசு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக எலான் அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டாலும் டிராகன் விண்கலத்தை தர மாட்டேன் என்று மறுத்துள்ளார்.
40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின்படி டிராகன் விண்கலத்தை நாசா செயல்படுத்தி வருகிறது.டிரம்பினால் சர்வதேச விண்வெளி திட்டம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் எக்ஸ் பயனர் ஒருவர் விடுத்த கோரிக்கையின் படி டிராகன் விண்கலத்தை நிறுத்த மாட்டோம் என்று அவருக்கு பதில் அளித்துள்ளார் எலான்.
ஒருவேளை டிராகன் விண்கலத்தின் சேவை நிறுத்தப்பட்டால் ரஷ்யாவின் சூயஸ் விண்கலத்தின் உதவி தேவைப்படும். எலனின் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் மீதான அவரது சொத்து மதிப்பு 2.80 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.





