தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு!! விதான சவுதா முதல் மைதானம் வரை!!

From Vidhan Souda to Maidan!!

பெங்களூரு: விதான சவுதா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் உருவாக்கியது தமிழர்கள் தான். தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கிய தமிழன் முதலியார் என்பவர். கர்நாடக பி.ஆர்.மாணிக்கம் சட்டசபை இயங்கும் விதான சவுதா தஞ்சாவூரின் கட்டிட கலையின் அடிப்படையில் அமைத்து கொடுத்தவர். கர்நாடகாவின் பெருமைகளாக இருப்பது கிரிக்கெட் ஸ்டேடியம், விதான சப்தமும் தான்.

இவ்வாறு அடையாளங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. சின்னசாமி முதலியார் 1900 ஆம் ஆண்டுகளில் பிறந்து மைசூர் மாநிலத்தில் தொழில் முறை வழக்கறிஞராகவும், கிரிக்கெட் நிர்வாகியாகவும் செயல்பட்டவர்.  1933 ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனராக இருந்தவர். 1953 முதல் 1978 வரை செயலாளராக இருந்து பின் 1978 முதல் 1990 வரை அதன் தலைவராகவும் இருந்தார். 1969 ல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான மேற்பார்வை, அரசு அனுமதிகள், நிதி திரட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் என்று அனைத்திலும் நேரடியாக அவர் ஈடுபட்டார்.

1974-75 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் இந்திய சுற்றுப்பயணம் செய்ய செய்த போது மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்தும் அந்தஸ்து வழங்கப்பட்டது பெருமைக்குரியது. 1982ல் ஒருநாள் டெஸ்ட் போட்டிகள், ஐபிஎல் தொடர், ஆர்சிபி அணியின் முகாம்  மற்றும் 1996 ல்  உலக கோப்பை போட்டிகள்  என முக்கிய நிகழ்வுகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன.

விதான சவுதா கர்நாடக மாநிலத்தின் தலைநகராக பெங்களூருவில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் ஆகும். சட்டசபை சரியில்லாமல் இருப்பதாக வெள்ளையர்கள் கேலி செய்ததை அடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அழகுள்ள கட்டிடமாக கட்ட முடிவு செய்து ஒரு தமிழனை தேர்வு செய்தார். அவர் பி ஆர் மாணிக்கம். அவர் ஒரு திறமையான தமிழ் பொறியாளர்.

விதான சவுதா 1951 இல் தொடங்கப்பட்ட நிலையில் இந்திய மற்றும் திராவிட கட்டிடக் கலையின் கலவையாகவும் திகழ்ந்தது. இவரின் கீழ் 1500 மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சிற்பிகள் ஆகியவர்களைக் கொண்டு 1956-இல் முடிக்கப்பட்ட கட்டிடமாகும். இந்த கட்டிடத்தின் உயரம் 150 அடி மேலும் இந்திய தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை கட்டிடத்தில் பிரதிபளிக்கும் தாமரை மொட்டுக்கள் இந்த கட்டிடத்தில் இருப்பது தமிழனுக்கு பெருமை சேர்க்கும்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram