தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல்!! அச்சுறுத்தும் தொற்று!!

spread of Corona continues to increase!!

 டெல்லி: நாடு முழுவதும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா  தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 5364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளா மாநிலம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் எட்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 4724 பேர் இத்தொற்றின் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணி நேரத்தில் 764 பேருக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் இரண்டு பேருக்கும் கர்நாடகாவில் மற்றும் பஞ்சாப்  ஒருவர் வீதம் மாநிலங்களில் நான்கு பேர் என உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் 194 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஜனவரி முதல் இந்த மாதம் வரை கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் 59 ஆக உயர்ந்துள்ளது.

உருமாற்றம் பெற்ற வைரஸ் வீரியம் அதிகமாக இல்லாததால் தொற்று பாதிப்பு இல்லை என்று அறிவுறுத்தப்பட்டாலும்  முதியோர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது  சுகாதாரத்துறை.

இந்த உருமாற்றம் பெற்ற வைரஸின் மூலம் தைராய்டு மற்றும் அமைதியான மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியில் உயிரிழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தொற்று உள்ளதை  உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram