இந்தியாவில amazon தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி amazon செயலி மற்றும் இணையதளம் வாயிலாக செய்யப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் ₹5 கட்டணம் மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக (Marketplace Fee) வசூலிக்கப்படும்.
Amazon நிறுவனம் இதற்கான காரணத்தை விளக்கியுள்ளது: தங்களது இயங்கும் செலவுகளை சமாளிப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான சேவை வழங்குவதற்கும் இந்த கட்டணம் அவசியம் என கூறியுள்ளது. உலகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டெலிவரி மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் முயற்சிக்கு இந்த கட்டணம் உதவும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் (பிரைம் உறுப்பினர்கள் உட்பட) அனைவருக்கும் பொருந்தும்.
டிஜிட்டல், பில்கள், மொபைல் ரீசார்ஜ், அமேசான் ஃப்ரெஷ் மற்றும் சில தேர்ந்த சேவைகள் மட்டுமே இதில் விலக்கு பெறும். ஆர்டர் முழுமையாக ரத்து செய்யப்படும் போது கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும். பகுதி ரத்து (partial cancellation) செய்யப்பட்டால் கட்டணத்தின் ஒரு பகுதி திருப்பித் தரப்படும். ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு செய்யப்படும் ரிட்டர்னுக்கு கட்டணம் திருப்பித் தரப்படாது.
இந்நிலையில் அமேசான் வாடிக்கையாளர்களிடையே இதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன. ஏற்கனவே அதிகமான டெலிவரி கட்டணங்கள் மற்றும் பல்வேறு ஷாப்பிங் சலுகைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இந்த புதிய கட்டணம் வாடிக்கையாளர்களை மேலும் சிரமப்படுத்தும் என விமர்சனம் எழுகிறது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் இதற்கு முன்னே பிளாட்பார்ம் கட்டணங்களை அறிமுகப்படுத்தியிருந்தன. ஆரம்பத்தில் ₹2 கட்டணம் வசூலித்துக் கொண்ட இந்நிறுவனங்கள் தற்போது ₹11 வரை உயர்த்தி உள்ளன.
Amazon-னின் இந்த புதிய கட்டணம் கூடுதல் வருமானம் சேர்க்கும் வழியாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். முடிவில், இந்த கட்டணம் Amazon வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பது வருங்காலத்தில் தெரியவரும். ஆனாலும், தற்போது இணைய வணிகத்தில் புதிய கட்டணபயணம் தொடங்கும் வாய்ப்பு உருவாக்கியிருக்கிறது.