குட்டையை குழப்பிய உக்ரைன்!! ஆபரேஷன் ஸ்பைடர் வெப் மிஷன் பெயில்!!

Operation Spider Web Mission fail!!

 

கீவ்:  உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் “ஆபரேஷன்ஸ் ஸ்பைடர் வெப்” என்கிற ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன். இதனை சமாளிக்க ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக 400, 40 ஏவுகணைகளை கொண்டு கொடூர தாக்குதலை நேற்று  (ஜூன் 6) அரங்கேற்றியது.

 உக்ரைன் தாக்குதலில் ரஷ்யாவின் எல்லையை கடந்து 4000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது 41 விமானங்கள் அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இந்த நடக்கும் போரில் இந்த தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. அமைதியாக இருந்த ரஷ்யாவை உசுப்பி விட்டது உக்ரைன்.

இதுவரை நடந்த தாக்குதலில் இது பெரிய தாக்குதல் 10 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். கொடூரமான செயல் இது என்று உக்ரைன் அதிபர் புழம்பியுள்ளார். ரஷ்யா தாக்குதலின் போது 407 ட்ரோன்கள் மற்றும் 45 பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனின் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகரங்களை தாக்கியது.

ஷாஹித் மற்றும் டிகோய்கள் போன்ற 2 டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை நடத்தியது. ஷாஹித் டிரோன்கள் ஆயுதங்களை சுமந்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது. குறைந்த விலையில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய இந்த டிரோன்கள் ராணுவ இலக்குகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதன் உட்கட்டமைப்பு போன்றவற்றை தாக்கியது.

டிகோய்கள் மூலம் உக்கரை வான் பாதுகாப்பு அம்சத்தை குழப்புவதற்காக  தயாரிக்கப்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் ஆகும். Kh- 101 கோஸ் வகை ஏவுகணைகள் என்று உக்ரைன் கூறியுள்ளது ஏவுகணைகள் மொத்தம் 45 ரஷ்யா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை வைத்து நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக அளிக்கக்கூடிய திறன் உடையது.

6 ஏவுகணைகள் இஸ்கந்தர் பாலிஸ்டிக் வகையை சேர்ந்த ஏவுகணைகள். இந்த தாக்குதலின் போது 6-10 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 80 பேருக்கு மேல் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் கூறியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram