முதல்வர் மாவட்ட செயலாளர்களுக்கு வைத்த செக்!! பரபரக்கும் தேர்தல் களம்!!

அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களை இருப்பதை ஒட்டி, அதன் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவும் தொடர்ந்து பல அப்டேட்களை செய்து வருகின்றது. இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆன்லைனின் காணொளி மூலம் நடைபெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டசபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் முதல்வர் மாவட்ட வாரியாக செயல்படும் செயலாளர்களுக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட பல முடிவுகளை எடுத்துரைத்துள்ளார்.

மாவட்ட வாரியாக பூத்திற்கு வாக்காளர் சேர்ப்பது, உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகியவற்றிற்கு கெடுபிடி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டவை, மாவட்ட வாரியாக ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 30 சதவீதம் வாக்காளர்களை இணைக்க வேண்டும்.

உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வேலை புரியாமல், திமுக அரசின் கொள்கைகளை கூறி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும். பொதுமக்கள் குறைகளை முழுவதும் கேட்டு அதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்று சரமாரியாக மாவட்ட செயலாளர்களுக்கு பணியை ஒப்படைத்துள்ளார். மேலும், உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram