ஐபிஎல் 2025 சீசன் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து ரசிகர்களை பீதியடையச் செய்தன. இதனால் நிர்வாகமும் திருப்தி அடையவில்லை! இந்த சூழ்நிலையில் ஐந்து முக்கிய வீரர்களுக்கு ‘பைபை’ சொல்ல நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், 2026 ஐபிஎல் சீசனில் புதிய முகங்களை கொண்டு வர விரும்புவதாகவும் தெரிகிறது. அந்த வீரர்கள் யார் தெரியுமா? டெவோன் கான்வே இடதுகை தொடக்க ஆட்டக்காரரான இவர், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரூ.6.25 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். ஆனால், 6 போட்டிகளில் வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து நிர்வாகத்தின் நம்பிக்கையை தவற விட்டார். தொடக்க வீரராக கூட இயங்காத இவர் அடுத்த சீசனில் விடுவிக்கப்படுவார் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முகேஷ் சவுத்ரி
ஐபிஎல் 2025-ல் வேகப்பந்து வீச்சு மூலம் தாக்கம் ஏற்படுத்துவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதிலும் 1 விக்கெட் மட்டுமே பெற்றார். அதுவும் அணிக்கு எந்த விதமான ஆதாயமும் தரவில்லை. அவரது மோசமான சாதனை அவரது இடத்தை அடுத்த சீசனுக்கு கேள்விக்குறியாக்கியுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின்
9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பந்து வீச்சு வீரர். பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து, ஆட்டத்தை நிர்வாகமும் ரசிகர்களும் விரக்தியுடன் பார்க்க வைத்தார். பேட்டிங்கிலும் ஒரே மாதிரியான தோல்வி. அதனால் அடுத்த சீசனில் அவரையும் விடுவிக்க நிர்வாகம் மனதை உறுதியாக்கியுள்ளது.
விஜய் சங்கர் 1.2 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இவருக்கு 6 போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்புகளை தன் சாதனைகளால் நிரூபிக்க இயலவில்லை. 118 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது நிர்வாகத்தை ஏமாற்றமடைய செய்தது. ராகுல் திரிபாதி தொடக்க வீரராக அவர் களமிறங்கினாலும், தொடக்கம் மட்டும் தெரியும், முடிவு தெரியாது! தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தும் அவர் தொடர்ச்சியான தோல்வி மட்டுமே கண்டார். இதனால் அடுத்த சீசனில் அவரும் அணியில் இடம் பிடிப்பது கடினம்.சிஎஸ்கே நிர்வாகம் இப்போது புதிய வீரர்களை தேடி அணியை புதுப்பிக்க கடுமையான முடிவுகளை எடுக்கத் தயார் ஆகி விட்டது.
2026 ஐபிஎல் சீசனில் புதிய முகங்களை கொண்டு வந்து ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் ஆட்டத்தை காண்பிக்க முயற்சிக்கிறது. ரசிகர்களே காத்திருங்கள்! இன்னும் பல மாற்றங்கள் வரப்போகின்றன. அந்த மாற்றங்களில் இந்த 5 வீரர்களுக்கும் இடம் இருக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…