Link- ஐ தொட்டால் இரட்டிப்பு லாபம்!! ரூ54 லட்சத்தை பரிக்கொடுத்த பேராசிரியர்!!!

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ராஜகுமாரன் ஆன்லைன் முதலீட்டில் லாபம் பெறும் ஆசையில் 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். சமூக வலைதளங்களில் ‘83 சதவீதம் லாபம் பெறும்’ என்ற பேரொலி விளம்பரம் வந்தது. அதை நம்பிய ராஜகுமாரன் முகநூல் பக்கத்தில் வெளியான லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்தார். அதன்பின், மஞ்சு பட்சிசா என்ற நபர் வாட்ஸ்அப்பில் அவரை தொடர்பு கொண்டு, பங்குசந்தை முதலீட்டில் லாபம் தருவதாக கூறி, டெலிகிராம் குழுவிலும் சேர்த்தார். “ஏஸ்பிஐஎஸ்” என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்யுமாறு கேட்ட அவரின் ஆசை வார்த்தைகளுக்கு ராஜகுமாரன் நம்பி, 54.42 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். முதலில் அந்த செயலியில் லாபமாக 96 லட்சத்து 3 ஆயிரத்து 669 ரூபாய் காட்சியளித்தது. ஆனால் அந்த பணத்தை அவர் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை. அதே சமயம் அவருக்கு சந்தேகம் எழ, உடனே புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிபுர் ரகுமான் என்ற வாலிபர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அசாமில் இருந்து போலீசார் அவரை விரைந்து கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே அவரது பெயரில் 30க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவானதும், அவரது சகோதரரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி வரை சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்து ஒரு சிம்கார்டு, மூன்று செல்போன்கள், wifi இன்டர்நெட், இரண்டு லேப்டாப்கள், மற்றும் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். அதேசமயம், இந்த மோசடியில் தொடர்புடைய மூன்று பேர் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram