ஆறு உருவமான முருகப்பெருமான் தன் தாயரான பார்வதி அணைத்துக் கொள்கையில் ஒரே உருவமாக மாறிய திருநாள். வைகாசி விசாகத்தில் தானம் செய்வது மிக உகந்தது. புத்தர் பிறந்த நாளாகவும், தீட்சை பெற்ற நாளாகவும் இந்நாள் விளங்குகின்றது. பல சுவாமியடிகள் இந்நன்னாளில் பல நல்ல விஷயங்களை தொடங்கி வைத்துள்ளனர். மேலும் இந்த நன்னாள் ஆனது, நமது கர்ம வினைகளை எல்லாம் அழித்து நம் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி நம்மை கூட்டிக் கொண்டு செல்வது.
நம் காது பட, பல அதிசயங்களை நடத்திக் காட்டியவர் முருகர். அவரை மனதார முருகா என்று அழைத்து அவருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பலகாரத்தை செய்து வைப்பது நமக்கு நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். வழிபடும் நேரம் ஆனது காலையில் ஏழரை மணி வரை, அதன்பின் ஒன்பதே கால் மணி முதல் 10:30 மணிக்குள், மாலை நேரம் விசாக நட்சத்திரம் முடிந்த நிலையிலும் 6 மணிக்கு மேல் மனதார பூஜை செய்து கொள்ளலாம்.
பெரும்பாலும் இந்த வைகாசி விசாக நட்சத்திரத்தில் கர்மவினைகள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை அறுபடும் என்பதே பல அடியார்களின் வாக்கு. திருமண தாமதம், குழந்தை மகப்பேறு, தீராத உடல் வலி, மனம் சார்ந்த குழப்பங்கள் ஆகியவை அனைத்தும் முருகன் வழிபாட்டால் நேர்மறை எண்ணங்களை பெறும்.