RBI ரெப்போ விகித குறைப்பு, வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு செய்தி! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வாரம் ரெப்போ விகிதத்தை 0.50% குறைத்து 5.50% ஆக நிர்ணயித்துள்ளது. இதன் நேரடி பலன் வீட்டுக் கடன், ஆட்டோமொபைல் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்குமான EMI குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
வங்கிகள் பெரும்பாலும் உங்கள் வீட்டுக் கடன் அல்லது ஆட்டோமொபைல் கடன் வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைத்து (repo rate-linked loans) நிர்ணயிக்கும். ரெப்போ விகிதம் குறையும்போது வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்து, உங்கள் மாதாந்திர EMI-யை குறைக்க முடியும். ஆனால், பல வங்கிகள் இது குறித்து உங்களிடம் விருப்பம் கேட்காமல் தானாகவே EMI குறைப்பை செய்யாது.
₹50 லட்சம், 20 வருட கடனுக்கு: மாத EMI சுமார் ₹2,000 வரை குறையும். கடன் காலத்துக்குள் ₹4.7 லட்சம் வரை சேமிக்க முடியும். ₹30 லட்சம் கடனுக்கு: மாத EMI சுமார் ₹1,176 வரை குறையும். EMI குறையாத வங்கிகளில், நீங்கள் அதே EMI செலுத்தி கடன் காலத்தை குறைத்துக் கொள்ளலாம். இதனால் கூடுதலான வட்டி செலவுகளை சேமிக்கலாம்.
வங்கி கிளையில் சென்று ஒரு விண்ணப்பம் எழுதுங்கள். “ரெப்போ விகித குறைப்பு காரணமாக என் EMI அல்லது கடன் காலம் குறைக்கும்படி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். வங்கி உங்களிடம் விருப்பம் கேட்டே இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
HDFC போன்ற வங்கிகள், EMI அல்லது கடன் காலம் குறைக்க வாடிக்கையாளர்களிடம் விருப்பம் கேட்டுள்ளன.
ஆனால், இன்னும் சில வங்கிகள் மாற்றங்களை அமல்படுத்தவில்லை. புதிய வீட்டுக் கடனுக்கு மாத EMI ₹3,800 முதல் ₹4,000 வரை குறையலாம் வட்டி செலவு குறைவதால் அதிகபட்சம் சேமிக்க முடியும். உங்கள் வங்கி EMI குறைத்ததா என்பதை உறுதி செய்யுங்கள். குறைக்கவில்லை என்றால் கிளையில் சென்று உரிமை கேட்டுக்கொள்ளுங்கள். EMI குறைத்தால் உங்கள் மாத செலவுகள் குறையும். இல்லையெனில், அதே EMI செலுத்தி கடன் காலத்தை குறைத்தால் கூடுதலான வட்டி செலவுகளைச் சேமிக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்! இப்போது வீட்டுக் கடன் எடுப்பவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. வங்கிகள் உங்கள் கடன் வட்டி விகிதத்தை குறைத்து உங்கள் EMI குறைக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வையுங்கள்.