செவ்வாய் கிரகத்தில் ராட்சத எரிமலை கண்டுபிடிப்பு!! எவரெஸ்ட் விட இரண்டு மடங்கு உயரமா??

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் மார்ஸ் ஒடிஸி விண்கலம், பூமியின் எவரெஸ்ட் சிகரத்தை விட இருமடங்கு உயரமுள்ள ஆர்சியா மான்ஸ் எரிமலையின் அபூர்வமான புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த எரிமலை சுமார் 20 கி.மீ (12 மைல்) உயரம் கொண்டது, இது பூமியின் எவரெஸ்ட் சிகரமான 8.8 கி.மீ உயரத்தை மிஞ்சுகிறது.

இந்த அரிய புகைப்படம் 2025 மே 2-ஆம் தேதி, THEMIS கருவியின் உதவியுடன் அதிகாலை நேர மேகக் கூட்டங்களுக்கு இடையே படம் பிடிக்கப்பட்டது. விண்வெளி வீரர் தனது விண்கலத்திலிருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை தரும் இந்த புகைப்படம், செவ்வாய் கிரகத்தில் தூசி, பனிக்கட்டி மேகங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல்களை வழங்கியுள்ளது.

தார்சிஸ் மான்டெஸ் எனும் பிரம்மாண்ட எரிமலைத் தொகுதியின் தெற்குப் பகுதியில் உள்ள ஆர்சியா மான்ஸ், செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். அதன் உச்சிப் பகுதியில் வளிமண்டல அழுத்தம், பூமியின் கடல் மட்ட அழுத்தத்தின் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.

இந்த புகைப்படம் நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது செவ்வாய் கிரகத்தின் பருவகால மாற்றங்களை புரிந்துகொள்ளவும், அதன் மர்மங்களை தீர்க்கவும் புதிய வாசலை திறக்கிறது. அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது, அர்சியா மான்ஸ் பற்றி எடுத்த இந்த அரிய புகைப்படம் நாசா மற்றும் மனித குலத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னொரு பொற்கல்வெட்டு பதிவாகும் என்று கூறலாம்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram