14 நாடுகளுக்கு விசா தடை!! சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு!!!

சவுதி அரேபியா, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வொர்க் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் பருவத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், தவறான முறையில் ஒர்க் விசாவை பயன்படுத்தி ஹஜ் செய்யவரும் பயணிகளை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஒர்க் விசா, டூரிஸ்ட் விசா, பிஸ்னஸ் விசா போன்றவற்றை பெற்றுக் கொண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அனுமதியில்லாமல் ஹஜ் மேற்கொள்வதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை. மே 2025 முதல் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை, ஹஜ் பருவம் முடியும் ஜூலை மாதம் வரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்க் ஒர்க் விசா (bulk work visa) உம்ரா, பிஸ்னஸ், குடும்ப, டூரிஸ்ட் விசா உள்ளிட்டவை. இதில் கட்டுமானத் துறைகளுக்கு அதிகமாக வெளிநாட்டு ஊழியர்களை ஹோட்டல் மற்றும் வீட்டு வேலை உள்ளிட்ட துறைகளுக்கு அதிகமாக நியமிக்கும் நிறுவனங்கள் பாதிப்படைகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், எகிப்து, இந்தோனேசியா, அல்ஜீரியா, ஏமன், ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும்.

வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பி வேலை நடத்தும் சவூதி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி. புதிய ஊழியர்கள் வந்து சேர முடியாததால் கட்டுமானம், ஹோட்டல், வீட்டு வேலை போன்ற துறைகள் உடனடி பாதிப்புக்கு ஆளாகும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை தேடி வரும் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

மீண்டும் எப்போது விசா வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஹஜ் பருவம் முடிந்த பிறகு நிலைமையை மதிப்பீடு செய்து புதிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இந்தியா உட்பட 14 நாடுகளுக்குச் சவூதி அரசு விசா தடையை விதித்திருப்பது, மோடி அரசின் வெளிநாட்டு கொள்கைகளின் தோல்வி” என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram