கிருஷ்ணகிரி: டீன் ஏஜ் பெண் ஒருவர் சமீபத்தில் அவரது உறவினர்களோடு கிருஷ்ணகிரி மலைக்கு சென்று உள்ளார். அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை மலை மீது மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணங்களை எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த இளையவளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். மனம் தளராமல் அந்த சிங்கப்பெண் அவர்களை எதிர்த்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறிய அடையாளத்தை அடிப்படையாக வைத்து போலீசார் குற்றவாளிகளில் இருவரை முதலில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இருவரை தேடி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் பொன்மலை குட்டை பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த செய்தி கேள்விப்பட்டு போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அவர்கள் போலீசின் பிடியில் அகப்பட்ட போது, போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்று உள்ளனர்.
அச்சமயம் அந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலில் காயம் விழுந்த குற்றவாளி கைதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்தவுடன் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மத்தியில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தாக்கப்பட்ட போலீஸாருக்கும் முதலுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.