ட்ரம்புக்கு ஆப்பு வைத்த தொழிலதிபர்.. கட்சி பெயரினை வெளியிட்ட எலான்!!

Elan released the party name!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையில் சமீப காலமாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. அதைத்தொடர்ந்து மஸ்க் புதியதாக கட்சி ஒன்று தொடங்குவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். எலான் கட்சி தொடங்கினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது உலக நாடுகளின் கருத்துக்கள்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலானுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இருவரும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி  தொடங்குவதற்கான கருத்துக்கணிப்பு நடத்திய போது 80% பேர் புதிய கட்சி தேவை என்று பதிலளித்திருப்பது எலான் மஸ்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது. “தி அமெரிக்கன் பார்டி” என்ற புதிய கட்சி தொடங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் புதிய கட்சி வெற்றியடையுமா? அதிபராக எலன் மஸ்க் பதவி ஏற்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மூன்றாவது கட்சி வெற்றி பெறுவது எட்டாக்கனியாகவே இருந்தது. மஸ்க் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்வியும் எழுந்துள்ளது.

அவ்வாறு புதிய கட்சி ஆரம்பித்தால் பாதிக்கப்படுபவர்களின் டொனால்ட் ட்ரம்ப் அவர் சட்டப்படி அமெரிக்கவில் பிறந்திருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் பிறந்து பின்பு கனடா அதன் பிறகு அமெரிக்கா வந்தவர். அமெரிக்காவில் குடியுரிமை இருந்தாலும் பிறப்பு என்பது அமெரிக்க மண்ணில் இல்லை. அதனால்  அதிபராக முடியாது என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது.

புதியதாக கட்சி தொடங்கினால் உலக நாடுகலில் பலவற்றை பாதிக்கும். மேலும், டிரம்பின் அரசின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதாகவும், எலான் மஸ்க் மூலம் தான் உலக நாடுகள் மீது டிரம்ப வரி விதிப்பை திணித்தார் என்றும் ட்ரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram