கழுதைகளை வாங்கி குவிக்கும் சீனா.. பாகிஸ்தானை கலியாக்கும் முயற்சி!! என்னதான் நடக்குது?

China buys and accumulates donkeys..

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு தேவையான முக்கிய ஆயுதங்களை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது அனைவரும் அறிந்தது. சீனாவும் தனக்கு தேவையான ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் இருந்து பரிமாற்றம் செய்தது ரகசியமாக உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மோதல் ஏற்பட்ட நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான திணறடித்தது இந்தியா. பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் இருந்து புதிய வகை ஜெட்களை வாங்குவதாக திட்டமிட்டு வருகிறது.

பாகிஸ்தானிடமிருந்து சீனா எந்த பொருளை வாங்க ரகசியம் தீட்டி வருகிறது என்று கேள்வி வரலாம். பாகிஸ்தான் கழுதைகளை சீனா வாங்கி வருகிறது. ஏனெனில், பாகிஸ்தானில் சில காலமாகவே குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலின் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் எத்தியோப்பியா இரண்டாவது சூடானும் உள்ளது. பாகிஸ்தானில் கழுதைகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டி உள்ளது. செங்கல் சூளைகள், விவசாயம், போக்குவரத்து, கழிவு சேகரிப்பு, சுமை இழுப்பது, முறை சாரா பொருளாதாரம் போன்ற துறைகளில் பரவலாக கழுதைகள் குறைந்து ஊதியத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழுதைகளின் மதிப்பு குறைந்த நிலையில் தற்போது உயர ஆரம்பித்து விட்டது. கழுதைகளின் தோல் எஜியா தயாரிப்பு தொழிலில் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் எஜியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் சீனா கருதுகிறது.

சீனாவில் கழுதைகளை எண்ணிக்கை குறைய தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானிடம் இருந்து கழுதைகளை வாங்கி குவித்து வருகிறது. நல்ல கழுதைகளின் விலை 1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் எஜியா தொழில் ஐந்து ஆண்டுகள் 160% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் காரணமாக சீனாவிற்கு கழுதைகள் தேவைப்படுவதால் பாகிஸ்தானிடம் இருந்து கழுதைகளை பெற்று வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram