உணவு டெலிவரி  துறையில் புதிதாக நுழையும் புதுமுகம்!!! இனி ஸ்விக்கி சோமட்டோ அவ்வளவுதான்!!!

சமீபகாலமாக உணவு டெலிவரி துறையில் சோமேட்டோ, ஸ்விக்கி டூயோபாலி மாதிரி தான் செயல்படுகிறது. அதனால் சிறு உணவகங்கள் “ஐயோ, கமிஷன் ரொம்ப அதிகம், லாபமே கிடையாது’” என்று கதறி வந்தன. இதை பளிச்சுன்னு க்ளியர் பண்ண ரேபிடோ தன்னோட புது திட்டத்தோட களமிறங்குகிறது. ரேபிடோவின் இந்த புதிய முயற்சி – சிறு உணவகங்களுக்கு தங்கப் பூமாலை!

ஸ்விக்கி, சோமேட்டோவில் 16% முதல் 30% வரை கமிஷன் வசூல் செய்யப்படுகிறது. அதனால் சிறு உணவகங்களுக்கு லாபமே இல்லாமல் போனது. ஆனால் ரேபிடோவின் திட்டம் 8%-15% கமிஷன் தான். இது உணவகங்களுக்கு வருமானத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ரூ.400-க்கு கீழே உள்ள ஆர்டர்களுக்கு ரூ.25 டெலிவரி கட்டணம். ரூ.400க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.50 டெலிவரி கட்டணம்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரியும் கட்டணம், உணவகங்களுக்கு செலவு குறைவு, இரண்டுக்கும்  லாபமான சூழல். இந்த திட்டத்தை இன்னும் வலுப்படுத்த தேசிய உணவக சங்கத்துடன் (NRAI) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது ரேபிடோ. இதனால் உணவக உரிமையாளர்கள் ‘நீண்ட நாளாக எதிர்பார்த்த மாற்றம் இதுதான் என்று சந்தோஷப்பட்டு வருகின்றனர். முதலில் பெங்களூருவில் – அடுத்த கட்டம் இந்தியாவெங்கும்! ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பெங்களூருவில் தொடங்கும் பைலட் திட்டம் வெற்றிபெற்றால், சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் திட்டம் தயாராகி வருகிறது.

இப்படி குறைந்த கட்டணம், கமிஷன், சிறு உணவகங்களுக்கு ஆதரவான திட்டம், வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரியமான உணவகங்களில் இருந்து சுவையான உணவு  இவையெல்லாம் ரேபிடோவின் நம்பிக்கை கீர்த்தி. இதனால் ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு சிக்கல் ஏற்படும் நிலைமை உருவாகலாம். உணவு டெலிவரி துறையில் இந்த புதிய போட்டி, வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் உண்மையான நன்மை தருமா? காலமே பதில்தரும்!

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram