ஒரு நாள் போட்டி தொடரில் ரோஹித் கேப்டன் இல்லை!! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!!

Rohit is not the captain in the ODI series.

Cricket: இந்திய அணியின் மிகப்பெரிய ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மா ஒரு நாள் போட்டி தொடரில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மே 7ஆம் தேதி இந்திய டெஸ்ட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து 12ம் தேதி விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவ்விரு வீரர்களின் ஓய்வு அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் மட்டும் இவர்கள் விளையாடி வருகின்றனர்.

 

அந்த ஒரு நாள் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கங்குலி பிசிசிஐ யின் தலைவராக இருந்தார். அப்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு என தனி தனி கேப்டன்கள் இருக்க வேண்டாம் என கூறியிருந்தார். அதனால் அப்போது ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து விராட் கோலியின் கேப்டன்சியை  நீக்கியது பிசிசிஐ. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சை கிளப்பியது.

 

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் தொடர்ந்து ஓய்வு பெற்ற பின் கில் டெஸ்ட் தொடருக்கு கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் டி20 தொடருக்கு கேப்டன் ஆகவும், ரோகித் சர்மா ஒரு நாள் போட்டி தொடரில் கேப்டன் ஆகவும் தொடர்கின்றனர். இது முழுமையாக பிசிசிஐக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்கு புதிய கேப்டனான நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கும் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram