லாஸ் ஏஞ்சல்ஸ் : சட்டவிரோதமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறியவர்களை கைது செய்தவர்களை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் அதிபர் கோபமடைந்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் மற்றும் கலிபோர்னியா ஆளுநர் ஆகியோ தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
கலிபோர்னியா கவர்னரை கைது செய்யவும் நான் பரிந்துரைப்பேன் என்ற நிலைப்பாட்டை மாற்றி கொண்டு உள்ளார் ட்ரம்ப். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 43 பேரை கைது செய்யதுள்ளனர். இதை தொடர்ந்து ட்ரம்ப்க்கு எதிராக பேரணி நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்து போராட்டம் பின் வன்முறையாக வெடித்தது.
ஆவேசமடைந்த அதிபர் சமூக ஊடக பக்கத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ்ட் ஏஞ்சல்ஸ் தற்போது சட்ட விரோதமாக குடியேறியவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மேலும், இந்த போராட்டத்தை முடித்து வைப்பதற்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டுமானாலும் எடுப்பேன். சட்ட ஒழுங்கு மீட்டெடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி அவர்களின் பிடியில் இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் மீட்டெடுக்கப்படும் என்றும் கூறினார்.
கோபமடைந்த ட்ரிம் காலிபோர்னியா ஆளுநரை கைது செய்ய நகர மேயருக்கு பரிந்துரை செய்திருந்தார். பின் அந்த பேச்சை மாற்றிக் கொண்டார். தனக்கு ஆளுநரை பிடிக்கும் , அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், மிகவும் திறமையாற்றவர் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஆளுநர் இந்த நாளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். மேலும், குடியரசு கட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக கட்சியாக இருந்தாலும் சரி எனக்கு கவலை கிடையாது. தற்போது அமெரிக்கா சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்றும் விமர்ச்சித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால் கோபமைடைந்து வாகனங்களை எரிப்பது, பாட்டில்களை எரிவது, சாலைகளை மறிப்பது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.





