தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம் 11 கோடி ரூபாய் வருவாய் இட்டப்படுகிறதுமேலும் வெறும் முப்பது லட்சம் ரூபாய் அந்த நெடுஞ்சாலை துறை பராமரிப்பதற்கு செலவு செய்கின்றனர்.
மதுரை தூத்துக்குடி இடையே சுமார் 135 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது இந்த சாலை ஆனது 2016 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த தொலைவிற்கு இரண்டு சுங்கச்சாவடிகள் அமைத்துவாகன ஓட்டிகள் இடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சுங்க கட்டணம் வசூலித்ததை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி மத்திய அரசு நிர்னைத்த தொகையைக் காட்டிலும் இரு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
மேலும் அந்த ஒப்பந்த நிறுவனம் நெடுஞ்சாலையை பராமரிக்க ரூபாய் 563 கோடி பணத்தை இதுவரை செலவு செய்திருக்க பட வேண்டும். ஆனால் இவர்கள் வெறும் முப்பது லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளனர்.இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த ஒப்பந்ததாரரை ரத்து செய்ய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு நெடுநாளாக நிலுவையில் இருந்ததால் அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க படாமல் வானம் சென்று வந்துள்ளது.
மேலும் தற்போது மதுரை தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது . மேலும் அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல்கள் நிறுவனங்களுக்கு கிடைத்த உடனே நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையில் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்படுவதை மதுரை தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர்.