அரபிக்கடலில் தீ விபத்து!! 2 வது நாளாக எரியும் சரக்கு கப்பல்!!

A fire accident in the Arabian Sea!!

திருவனந்தபுரம்: கேரளப் பகுதியில் அருகில் நடுக்கடலில் இரண்டு ஆவது நாளாக சிங்கப்பூர் சரக்கு கப்பல் கொழுந்துவிட்டு எரிகிறது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சிங்கப்பூர்  சீன சரக்கு கப்பல் மும்பை நோக்கி சென்றபோது நேற்று கேரளா கோழிக்கோடு , பேய்பூரின் கடல் பகுதியில் இருந்து வடக்கு 70 கடல் மைல் தொலைவின் வந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஜூன் ஏழாம் தேதி புறப்பட்டது என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல் என்றும் தெரிவிக்கின்றனர். பெயிண்ட், ரெசின், எனாமல், டைசிட்டோன், ஆல்கஹால், வார்னிஷ் மற்றும் லித்தியம் பேட்டரிகள் ஆகியவைகள் உள்ளன.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் எரி எண்ணெய்கள் கப்பலில் இருந்தன. இந்த சரக்கு கப்பலானது 100 டன் எடையுடன் புறப்பட்டதாக      கூறப்படுகிறது. பயணத்தின் போது ஏற்பட்ட இயந்திர கோளாறில் கேரளாவின் பேய்பூர் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட உடன் அருகில் இருந்த கொச்சி  கடற் படையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்திய கடற்படையினர் மற்றும் கடலோர காவல் படையினர்  தீயை அணைக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கப்பலில் இருந்த 18 பேரை இந்திய காவல்  படையினர் மற்றும் கடலோர காவல் படை பத்திரமாக மீட்டு உள்ளனர்.  இரண்டாவது நாளாக கப்பலில் தீப்பற்றி எரிவதால் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram