பிச்சை பாத்திரத்துடன் அலைகிறோம்.. பாகிஸ்தான் பிரதமர் அதிருப்தி புலம்பல்!!  

Pakistani Prime Minister expresses dissatisfaction!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய வங்கி என படங்களை வாங்கி சரிப்படுத்த முயல்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் வரலாற்றில் காணாத கடன் உச்சத்தை தொட்டுள்ளது என  பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான்  போரில் பொருளாதாரத்தில் மேலும்  வீழ்ச்சியடைந்ததாய் கூறப்படுகிறது.

மொத்த கடனாக  ரூ. 76,007 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 76 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பாகிஸ்தானின் கடன் உச்சத்தை எட்டியது இல்லை என்றும், புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடன் 2020-21 இல் மட்டும் ரூ. 39,860 பில்லியனாக இருந்தது. ரூ 17,380 பில்லியனாக 10 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. 10 ஆண்டுகளில் மட்டும் கடன் தொகையானது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு கடன் தொகை மட்டும் ரூ.51,518 பில்லியன் என தெரிவித்துள்ளது. சமீபத்தில் உலக வங்கிகளில் கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூறுகையில், இன்று நாம் எந்த நாட்டு நட்பிற்கு சென்றாலும் அல்லது நாட்டின் தலைவருக்கு தொலைபேசியில்  அழைப்பு விடுத்தாலும் அவர்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுத்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். மேலும், நம்மை விட சிறிய நாடுகள் கூட மிஞ்சி விட்டது. 75 ஆண்டுகளாக நாம் பிச்சை பாத்திரத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என்று அதிருப்தியில் புலம்பியுள்ளார் பிரதமர் ஷெரீப்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram