நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, இந்திய அரசு ஆரம்பித்துள்ள பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வருடத்திற்கு வெறும் ரூ.20 செலுத்தினால், ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு ஆகும். 2015-இல் தொடங்கப்பட்ட PMSBY திட்டம், விபத்து காரணமாக ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனம் போன்ற பெரிய நஷ்டங்களின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உடனடியாக நிதி உதவி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
மரணம் அல்லது நிரந்தர முழுமையான ஊனமுற்றல் ஏற்பட்டால் ₹2 லட்சம் வரை இழப்பீடு.
பகுதி ஊனமுற்றல் ஏற்பட்டால் ₹1 லட்சம் வரை இழப்பீடு.
18 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் சேர முடியும். ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பாலிசி அமலிலிருக்கும்.
வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பிரீமியம் பற்று வசதி. இந்த திட்டத்தில் பதிவு செய்வது எளிது: தனது வங்கி கிளை அல்லது அருகிலுள்ள பொதுச் சேவை மையம் (CSC) மூலம் விண்ணப்பிக்கலாம். பங்கு பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பிரீமியம் பிடித்தம் செய்யப்படும், இது புதுப்பிப்பை சுலபமாக்குகிறது.
அனைவரும் இந்த திட்டத்தில் பங்கேற்று, எதிர்பாராத விபத்துக்களில் இருந்து குடும்பத்திற்கும், நமக்கும் நிதிக் காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். மிகவும் ஏழ்மை சூழ்நிலை இருக்கும் குடும்பத்திற்கு இந்த காப்பீட்டு திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான்.





