வாஷிங்டன்: பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை வர்த்தகப் போரின் காரணமாக 2025 ஆண்டிற்கான 2.3% சதவீதமாக குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய வரி போர் தான் வர்த்தகப் போருக்கான அடிப்படை என உலக வங்கி குறிப்பிடுகிறது. 2025 ஆண்டிற்கான உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களால் குறைத்துள்ளது.
கடந்த 2024 இல் 2.8 % இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 2.3% இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் உலக வங்கி குறைத்துள்ளது. அமெரிக்க பொருளாதார 2025 இல் 1.4 % இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது கடந்த ஆண்டுகளை விட பாதியாகும் என உலக வாங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிப்பிடாமல் பல நாடுகளில் இருந்து வரும் பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்தது மற்றும் வர்த்தக தடைகளை அதிகரித்தது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கைகள் பொருட்களின் விலையை அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் பல்வேறு வரிகளை விதித்துள்ளார்.அதன்படி பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு வர்த்தக தடை விதித்துள்ளார். இதனால் உலக பொருளாதாரம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரம் மீண்டும் ஒரு கொந்தளிப்பில் சிக்கி உள்ளதாகவும், சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மக்களின் வாழ்க்கையில் பெரிய அடி விழும் என்றும் எச்சரித்துள்ளார் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்தர்மிட் கில்.





