பள்ளி விழாவில் திடீரென வீசிய பலத்த காற்று!! 25 அடி தூக்கி எறியப்பட்ட குழந்தைகள்!!!

தென் ஆப்பிரிக்காவின் ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் பலர் முன் நிகழ்ந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த காற்றழுத்தத்தில் செயல்படும் பவுன்ஸ் ஹவுஸ் (Inflatable Bounce House) திடீரென பறந்துபோய் குழந்தைகளை காயப்படுத்தியது.

பல்வேறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அந்த ஹவுஸ், திடீரென ஏற்பட்ட பலத்த காற்றால் நிலைத்தடுமாறி 25 அடி உயரம் வரை தூக்கி எறியப்பட்டதாம். அப்போது அதில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பவுன்ஸ் ஹவுஸிலிருந்து 25 அடி மேலிருந்து கீழே விழுந்தனர். இந்த சம்பவம் விழாவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் முன்பே நடந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவசர உதவி குழுவினர் மற்றும் பள்ளி ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகிறது. அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு, பள்ளி விழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளதை ஒரு முறைமீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பவுன்ஸ் ஹவுஸ்”பூமியில் பதிக்கப்படாமல் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இப்படியான நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க பள்ளி விழாக்களில் கட்டாய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தேவை என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram