10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பானது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக எடுக்கப்படவில்லை. எனவே 2025 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல திடுக்கிடும் தகவல்களை ஐ.நா வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டி உள்ளது. அதேபோல் பெண்களின் கருத்தரித்தல் விகிதங்களும் சரமாரியாக குறைந்துள்ளது.
நவீன காலகட்டங்களில் பெண்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் கரு தானாக தணிக்காமல் கருத்தரித்தல் மையம் மூலமாக பல சோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இதனால் கருத்தரித்தல் விகிதம் 2.1 புள்ளிகளுக்கு மேல் இதுவரை இருந்திருந்தது. தற்சமயம் இது 1.9 ஆக குறைந்துள்ளது என தகவல்களை கொடுத்துள்ளது ஐநா. மேலும் பழைய காலங்களில் இந்தியாவில் மக்கள் தொகை ஆனது மிக அதிகமான காணப்பட்ட நிலையில் தற்சமயம் அது மிதமாக குறைந்து வருகிறது. இருப்பினும் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்சமயமும் திகழ்கின்றது என்று தெரிவித்துள்ளது.





