டாக்கா: இந்தியாவை வங்கதேசம் சீண்டி வரும் நிலையில் துருக்கி வங்கதேசத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி மற்றும் ராணுவ உதவிகளை துருக்கி வழங்கி வருவதாக உளவுத்துறை அறிவித்தது. அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து மிரட்டி வந்த நிலையில் பகல் காம் பயங்கரவாதிகளை வைத்து 26 பேரைக் கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் செந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை தாக்கியதால் சரணடைந்தது.
இந்நிலையில் வங்கதேசமும் இந்தியாவை சீண்ட தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ஷேக் அசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் துருக்கி இறங்கியுள்ளது. ஏற்கனவே போர் தாக்குதலுக்காக துருக்கி ட்ரோன் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கியுள்ளது.
தற்போது துருக்கி வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வருவதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. குறிப்பாக துருக்கி நிதி மற்றும் ராணுவ உதவிகளை தீவிரமாக அளித்து வருகிறது. மொக்பஜாரில் ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கு அலுவலகம் ஒன்று திறக்க துருக்கி உளவுத்துறை பொறுப்பேற்றுள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதற்கான முன் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் துருக்கி வடகிழக்கு பகுதியில் ஈடுபட்டு வருகிறது.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் மாணவப் பிரிவு தலைவர் சாதிக் கயூம் துருக்கி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், முக்கிய தலைவர்களை சந்திப்பதோடு, துருக்கியின் ஆயுத கிடங்கு மற்றும் ஆயுத தொழிற்சாலைகளை பார்வையிட உள்ளதாகவும் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதிபர் ரெசேப் தையிப் எர்டோகன் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளார். மேலும், தெற்காசியாவில் அவரது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து உதவிகள் மற்றும் ஆதரவுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது





