திமுகவின் அடுத்த கட்ட களப்பணி!! எங்கெல்லாம் ஆரம்பிக்க போறாங்க தெரியுமா!!

சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் குறித்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நடப்பாச்சி போல் அடுத்த ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்தில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுக பாஜக இணைந்து செயல்பட்டு வருகின்றது. ஆனால் திமுக 200 தொகுதியிலையாவது கைப்பற்ற வேண்டும் என்ற கணிப்பில் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து அதற்கு தகுந்தார் போல் பணிகளும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்சமயம் ஜூன் 20-ம் தேதி முதல் களப்பணி தொடங்கியாக வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டதாவது, வீடு வீடாகச் சென்று அந்த வீட்டில் திமுக வாக்காளர்கள் எத்தனை? மேலும் கட்சி புதிய உறுப்பினர்கள் இணைப்பில் திமுக அரசின் கொள்கைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை நடந்தாக வேண்டும். இதற்காக ஆங்காங்கே முகாம்கள் அமைத்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகின்றது. புதிய உறுப்பினர்கள் வருகைக்கு பல கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளன. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் இன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாகத்தான் அனைத்து கட்சிகளுக்கும் அமையும் என்று ஒரு கணிப்பு குறிப்பிடுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram