மாதம் ரூ 214 மட்டுமே!! 1லட்சம் யூனிட்களை விற்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பனி சாதனை!!!

ஜூன் 11, 2025: ஏதர் எனர்ஜியின் சமீபத்திய மின்சார ஸ்கூட்டர் ரிஸ்டா, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பெரும் வரவேற்பைப் பெருக்கி, 1 லட்சம் யூனிட் விற்பனை சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தினமும் 30 கிலோமீட்டர் பயணம் செய்தால், ரிஸ்டா ஸ்கூட்டரை மாதம் முழுவதும் ஓட்ட, வெறும் ரூ.214 செலவு தான் வரும் என கூறியுள்ளது. இது பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் மிகுந்த சேமிப்பை அளிக்கிறது.
ரிஸ்டாவின் முக்கிய அம்சங்கள்: 2.9 kWh பேட்டரி பேக் – சார்ஜ் செய்தால் 123 கிமீ வரை செல்லும். 3.7 kWh பேட்டரி பேக் – சார்ஜ் செய்தால் 125 கிமீ வரை செல்லும்.
0-40 கிமீ வேகம் – வெறும் 3.7 விநாடிகளில் அடையும் அதிகபட்ச வேகம் – 80 கிமீ வரை
இன்னும் சிறப்பு அம்சங்கள்:
7 அங்குல டிஜிட்டல் டிஸ்ப்ளே – டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி 34 லிட்டர் இருக்கையின் கீழ் சேமிப்பு ஹெல்மெட் மற்றும் பிற பொருட்கள் வைக்க வசதி, 22 லிட்டர் முன் சேமிப்பு, பின்புற மேல் பெட்டி போன்ற ஆப்ஷன்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பைகளை தொங்க வைக்கும் கொக்கிகள், 900 மிமீ அகல இருக்கை , இருவர் கூடிய வசதியான பயணம், எடை: 119 கிலோ
விலை விவரம்:
ரிஸ்டா எஸ் மோனோ – ₹1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ரிஸ்டா இசட் சூப்பர் மேட் – ₹1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இந்த ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ப்ரோ, விடா வி1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக் ஆகியவற்றுடன் நேரடி போட்டி அளிக்கிறது.
அதிக வசதிகள், குறைந்த செலவு ரிஸ்டா, உங்கள் குடும்பத்திற்கே!

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram