தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்!! அடித்து செல்லப்பட்ட பேருந்து!! 49 பயணிகளின் நிலை என்ன?

Flooding in South Africa!!
ஜோகன்ஸ்பார்க் : தென்னாப்பிரிக்காவில் திடீரென பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்  நாடுகளில் தென்னாப்பிரிக்காவும்  இருக்கிறது. பனிப்பொழிவு இல்லாததால் வெப்பமண்டல நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளது.
பனிப்பொழிவால் போக்குவரத்து சேவை மற்றும் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் போது பள்ளி பேருந்து ஒன்று அடித்து செல்லப்பட்டது. பேருந்தில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 49  பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குழந்தைகள் உட்பட 49 ஆக அதிகரித்துள்ளது.
மத்தாதா  பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்தில் இருந்த ஆறு மாணவர்களை   சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 பேர் கிடைக்கவில்லை என்றும், அவர்களைத் தேடி வரும் பணி தீவிரமாக உள்ளது என்றும், என் வாழ்வில் நான் இப்படி ஒரு பேரழிவை பார்த்ததில்லை என்று கிழக்கு கேப் மாகாணத்தின் தலைவர் கூறியுள்ளார். இதற்கு அரசு நடவடிக்கைகள் எடுக்கும் பணி தீவிரமாக உள்ளது. மக்கள் தங்களது வீடுகளை பறிகொடுத்துள்ளனர். சிலர் குடும்பங்களை இழந்து உள்ளனர்.
லட்சக்கணக்கான வீடுகள் மின்சார இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தாதா பகுதியில் 58 பள்ளிகள் மற்றும் 20 மருத்துவமனைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் குப்பைகள் குவியல் குவியலாக தங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட தொடங்கியுள்ளது. கடந்த 2022 ல் இதே போன்ற கனமழை ஏற்பட்டதால் சுமார் 400 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram