மகளிர் பயணத்திட்டம் ஒரு சாதனை என்று பீத்தி குளம் திமுக அரசு, அதில் பயணிக்கும் பெண்களை “ஓசி” என்று அடையாளப்படுத்துவது என்ன நியாயம்? இந்த கேள்வியோடு இன்றைய அரசியல் களம் சூடாகியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ மகாராஜன் நிகழ்ச்சியில் பேசியபோது, “நாங்க ஆட்சிக்கு வரும் முன் சொன்னோம் இல்லையா! வேலை முடிச்சுட்டு ஓசியா பஸ்ல போங்கன்னு… இப்போ அதே மாதிரி போயிட்டு இருக்கீங்களே!” எனப் பெண்களை அவதூறாக பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் பேச்சாக மாறியுள்ளது. இந்தப் பேச்சு ‘மகளிர் இலவச பயணத் திட்டத்தையே’ கேள்விக்குள்ளாக்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. “ஓசி” என்ற வார்த்தை மக்களை அவமதிக்கின்றது எனவும், இது திட்டத்தின் பயனாளிகளை தாழ்த்தி பேசுவதாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மகளிர் விடியல் பயணம் மூலம் பயணிக்கும் பயனாளிகளை ஓசி என்று தாழ்த்தி பேசுவதில் அக்கறை காட்டும் திமுக அரசு, தமிழகத்தில் பஸ்கள் ஓட்டை ஒடாசலாக ஓடுகிறதை சரி செய்ய ஆர்வம் காட்டாதது ஏன்? அப்படிப்பட்டவர்களுக்கு விமர்சிக்கும் தகுதி இல்லை!” எனத் தெரிவித்தார். அவர் மேலும், “முன்னதாக பொன்முடி, கதிர் ஆனந்த், துரைமுருகன் ஆகிய திமுக எம் எல் ஏக்கள் சொன்ன வார்த்தைகளும் மக்களை அவமானப்படுத்துவதாக இருந்தது. மக்களுக்கு திட்டம் ஒன்று, ஆனால் பேச்சு வேறு!” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் திட்டங்களை விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி விட்டு, பயனாளிகளை இழிவாகப் பேசும் நடைமுறையை இனியும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தின் மமதையில் பேசும் திமுக தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை வரவேற்கும் எலக்ஷனில் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விடியல் பயணத் திட்டம் பெண்களுக்கு ஒரு சுதந்திரம், ஆனால் அதையே “ஓசி” என்று சொல்லும் பேச்சு அரசியல் கலாச்சாரத்துக்கே கேள்விக்குறி. அரசியல்வாதிகள் இனி வார்த்தைகள் மீது கவனம் செலுத்தவேண்டியது அவசியம்! என்று பலரும் இந்த சர்ச்சை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.





