பாகிஸ்தானுக்கு உதவும் யூனுஸ்!! தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நோக்கமா? 

Yunus helps Pakistan!!
டாக்கா : வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடை பெற்றிருக்கும் நிலையில் முகமது யூனுஸ் மீது பல விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் உடன் அதிக நட்புறவு காட்டுவதாக வங்கதேச மாணவர் லீக் அமைப்பினர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறை அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் அதிக  ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா   அரசு வீழ்த்தப்பட்டு நாட்டை விட்டு தப்பினர். பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில் இடைக்கால அரசாக முகமது யூனுஸ் பதவியேற்றார். முகமது யூனிஸ்  மீது ராணுவ தளபதி நெருக்கடிகளின் காரணமாக பதவியை விட்டு விலகுமாறு வலியுறுத்தினர். இடைக்கால அரசை கண்டித்து முகமது யூனுஸ் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் பதவியை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தினார். வங்கதேச மாணவர் லீக் அமைப்பின் தலைவர் சதாம் உசைன், முகமது யூனுஸ் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளிடம் அதிக உறவுகளை ஊக்குவிப்பதாக விமர்சித்துள்ளார்.
அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேச மாணவர் லீக் அமைப்பின் தலைவராக உள்ள உசைன் , முகமது யூனிஸை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அவர், “தங்கள் மண்ணில் ஒரு காலத்தில் இனப்படுகொலை செய்தவர்களை தான்  சட்டபூர்வமாக்குகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், 1971 இல் படுகொலைகளின் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்ததை குறிப்பிட்டு உசைன் விமர்சித்தார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram