கோடை காலம் மாற்றங்கள் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், காய்கறிகள் விலையில் அன்றாடம் மாற்றம் படிப்படியாக உச்சத்தை தொட்டு வருகின்றது. தக்காளி, வெங்காயம் போன்ற முக்கியமான காய்கறிகளும் நேற்றைய விலையை விட இன்று அதிக மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதன் பட்டியலை பின் வருமாறு காணலாம்.
சென்னையின் நிலவரப்படி, வெங்காயம் கிலோ ரூபாய் இருபதில் இருந்து 24 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி 14 ஆகவும், சேனைக்கிழங்கு இருபதாகவும், ஒரு கிலோ கருணைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், கிலோ பச்சை மிளகாய் 15 ரூபாயாகவும், சார் மிகுந்த எலுமிச்சை கிலோ 30க்கும் விற்கப்பட்டுள்ளது. இது சந்தையின் விலைமதிப்பு. சந்தையில் இருந்து கைமாற்றுபவர்களின் வியாபாரம் விலை என்னவென்பது சரியான தகவல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து சந்தையிலேயே விலை அதிகமாகும் நிலையில் வியாபாரிகளுக்கு கைமாறி மக்களுக்கு வரும் காய்கறிகளின் விலை என்னவோ? என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அத்தியாவசிய காய்கறிகள் மட்டுமல்லாது அனைத்து வகை காய்கறி அதாவது நீர் காய்கறிகளான சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றிலும் கணிசமான உயர்வு காணப்படுகின்றது. பூண்டு, இஞ்சி ஆகியவற்றிலும் விலை விரைவில் மிகப்பெரிய மாற்றத்தை காணலாம்