நிலவை தாக்கும் விண்கல்!! சிட்டி கில்லர் பூமியை தாக்குமா?

A meteorite hitting the moon!!
வாஷிங்டன்: சமீபத்தில் பூமியை நோக்கி  வந்த விண்கல் பற்றிய ஆய்வின் போது இந்த விண்கலானது பூமியை தாக்காது, மேலும் நிலவை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி  “2024 YR4” என்று பெயரிடப்பட்ட விண்கல் கடந்த ஆண்டின் இறுதியில் கண்ணில் புலப்பட்டது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை நோக்கி வரும். இதற்கு சிட்டி கில்லர் என பெட் நேம் வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.  இந்த விண்கலானது திரும்பி செல்லும் போது பூமிக்கு நெருக்கமாக செல்லும்.
அவ்வாறு செல்லும் போது  கண்ணில் புலப்பட்டது  என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், விண்கலானது பூமியை தாக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் விண்கல்லை பற்றிய ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது. அதற்கு ஆறுதலாக விண்கலானது பூமியை தாக்காது. ஆனால், நிலவை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர்.
“சிட்டி கில்லர்” ஆனது பயணிக்கும் பாதை வித்தியாசமாக உள்ளதால் தற்போதைக்கு நிலவை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே விண்கலானது நிலவை தாக்கும் என உறுதியாக கூறியுள்ளது. நிலவை தாக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஞ்ஞானிகள் நிலவைத் தாக்கும் வாய்ப்பு 3% இருந்த வாய்ப்பு  தற்போது 4.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்த தாக்குதலால் பூமிக்கும், மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள்.
சிட்டி கில்லர் ஆனது 2028 ஆம் ஆண்டு சூரியனை நோக்கி வரும் போது இந்த விண் கல்லை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள முடியும். 2032-இல் இந்த விண்கல்லானது நிலவைத் தாக்கும் என்றும், சுமார் 10 மாடி கட்டிடத்தில் அளவைக் கொண்ட இந்த சிட்டி கில்லர்   எச்சரிக்கையை கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram