எய்ம்ஸ் மருத்தவமனையா? விண்வெளி ஆராய்ச்சிக்கூடமா? கேள்விகளை தொடுத்தார் மு க ஸ்டாலின் !!

AIIMS Hospital? Is it a space research institute?
சேலம்: சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 ஆண்டுகளாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? இன்று கேள்வி எழுப்பி உள்ளார்.  மதுரைக்கு வந்த போது திமுக ஆட்சியை குறை சொல்லி ஆதங்கத்தை கொட்டினார் அமித்ஷா. மேலும், அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு விட்டு அதை செயலில் காட்டாமல் உள்ளதாக திமுகவை குற்றம் சாட்டியிருந்தார் அமித்ஷா.
10  ஆண்டுகளுக்கு முன்னர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன மருத்துவமனையா? அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? என்றும் மதுரை வந்த அமித்ஷா  எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை நேரில் சென்று பார்த்தாரா? போன்ற சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என மத்திய அரசு சொல்லியதில் கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கைகள் போதவில்லை என்று மத்திய மந்திரி செகாவத் கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் போது எடப்பாடி பழனிசாமி வாயை திறந்து யாரையாவது கேள்வி கேட்டாரா? தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார் என்று முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டங்கள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பினார். தமிழர்களின் தொன்மையை அளிக்கவும் மற்றும் அதை மறைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசின் கூடுதல் நிதி இருந்தால் தான் மத்திய அரசால் செய்ய முடியும் என்றும் விமர்சித்தார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram