லபுபு பொம்மை என்பது வெளிநாடுகளில் மிகப் பிரபலம் வாய்ந்த பொம்மை. இது பெரிய கண்களையும், முகம் சிரித்தபடி முயல் போன்ற காதுகளையும் கொண்ட ஊதா நிற பொம்மை. இந்த பொம்மையை உருவாக்க காரணமாக இருந்தவர் சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் பிறந்த கேசிங் லங்க் என்கிற ஒரு எழுத்தாளர். இவர் எழுதியுள்ள நோர்டிக் என்கின்ற நாட்டுப்புற கதை மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர கதையின் கதாபாத்திரம் தான் இந்த லபபு பொம்மை.
இந்த பொம்மையின் கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நான்கடி உயரமாக இந்த பொம்மையை ப்ளூம்பெர்க் (bloomberg) என்கின்ற நிறுவனம் ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் பலதரப்பட்ட வெளிநாட்டினர் கலந்து கொண்டுள்ளனர். பலர் இந்த பொம்மை மீது இருந்த மோகத்தால் ஆன்லைன் வாயிலும் ஏலத்தில் கலந்து கொண்டு உள்ளனர். ஏல முடிவில் அந்த நிறுவனமே ஷாக் ஆகி உள்ளது. இந்த பொம்மை கிட்டத்தட்ட 1,50,324 டாலருக்கு ஏலம் போகியுள்ளது. உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன ஒரே பொம்மை என்ற பெயரையும் பெற்றுள்ளது. இதன் இந்திய மதிப்பானது ஒரு கோடியே 28 லட்சத்து 65 ஆயிரத்து 695 ரூபாய். நம்ம ஊரில் எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு பொம்மை கேட்டாலே அலறுவாங்க. வெளிநாட்டுல கோடியில் பொம்மை வாங்கறாங்க என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





