ஈரானை தாக்கிய இஸ்ரேல்!! காரணம் இதுதான் !! இதன் பின்னணியில் யார்?

Israel attacked Iran!!

டெஹ்ரான்: இஸ்ரேல், ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை குறி வைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கான திட்டத்தை இஸ்ரேலின் மொசாத் குழு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அமைச்சரவை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை  முன்னறிவிப்பு இல்லாமல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் உதவி இல்லாமல் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட இதுவே காரணமாக அமையலாம் என் எ கூறப்படுகிறது.அதிகாலையில் டெஹ்ரானுக்கு வடகிழக்கு பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. நடக்கும் தாக்குதலானது அணு உலை மற்றும் ராணுவ தளங்கள் போன்றவற்றை குறி வைத்து தாக்கப்படுகிறது.

மேலும், ஈரானால் இன்னும் சில  நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்க தேவையான பொருட்கள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார். இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்காவின் ஈடுபாடு மற்றும் உதவியை எதிர்பார்க்காமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது  என்பதையும்  திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

தற்போது ஈரானிடம் 60-70% தூய்மையான செறிவூட்டப்பட்ட 5.5 டன் யுரேனியம் வைத்திருப்பதாகவும், அணு ஆயுதங்கள் தயாரிக்க ஏதுவான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலானது அவற்றை அழிக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும், இதற்கு திட்டங்களை மேற்கொண்டவர்கள் இஸ்ரேலின் மொசாத் அமைப்பினர் என்றும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் யூகித்துள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram