ஆதார் அட்டை அப்டேட் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து UIDAI சில வரைமுறைகளை வகுத்து வருகின்றது. மிக முக்கியமாக ஆதாரில் ஏதேனும் அவசிய மாற்றம் செய்வதற்கு எப்படி செய்வது? எத்தனை முறை செய்யலாம்? என்பதை இப்பதிப்பில் விரிவாக காணலாம். ஆதாரில் பெயர் முதல் பாலினம் வரை அனைத்தையும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் நிபந்தனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை சேவைகளை ஆஃப்லைனில் மட்டுமே உரிய சான்றிதளோடு மாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனில் ஒரு ஆதார் கார்டுக்கு வாழ்நாளில் இருமுறை மட்டுமே மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியமான ஆதரங்களான பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது திருமண சான்றிதழ் ஆகியவை முக்கியம். பாலினத்தை தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளவும் வழி உள்ளது. மொபைல் எண்ணை எத்தனை முறை வேண்டும் என்றாலும் திருத்திக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள பழைய மொபைல் எண் கண்டிப்பான முறையில் தேவைப்படும். பிறந்த தேதியை வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு. குறிப்பாக அதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ் ஆதாரம் வேண்டும். உங்கள் முகவரியையும் கேஸ் புக் நகல், வீட்டு ரசீது அல்லது மின்சார அட்டை பயன்பாடு ஆகியவற்றை காட்டி எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரு வழிகளிலும் அப்ளை செய்யலாம் என்று வரைமுறை வழங்கப்பட்டுள்ளது.