ஈரான்- இஸ்ரேல் தாக்குதல்.. பின்னணியில் அமெரிக்கா இல்லை!! கடும் கோபத்தில் டிரம்ப்!!

Iran-Israel attack..! Trump in a rage!!
 டெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலின் போது முக்கிய ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் புரட்சிகர காவல் படையின்  உயர்மட்ட தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முக்கிய கல்வியாளர்கள் ,அணு விஞ்ஞானிகள் மற்றும் மூத்த ராணுவ படை தளபதிகள் என முக்கிய புள்ளிகளை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைத்த தகவல் படி ராணுவ புரட்சிகர படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக செய்தி  கிடைக்காததால் ஜெனரல் ஹொசைன் சலாமி க்கு நடந்தது என்ன என விசாரித்து  வருகின்றனர். டெஹ்ரானை சுற்றியுள்ள 6 ராணுவ தளங்களை அழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
ஈரானின் பார்சின் ராணுவ வளாகம், ராணுவ தளபதிகளின் குடியிருப்புகள்  மற்றும் மற்ற குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. ஹெஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியது. செங்கடலில் இஸ்ரேல் கப்பல்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தினர். கடந்த ஆண்டு ஈரான் ஏவுகணைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 100 க்கு அதிகமான போர் விமானங்கள் ஈரானை தாக்கியது.
இவ்வாறு தாக்குதல்கள் மாறி மாறி நடந்த நிலையில் தற்போது எண்ணெய் உற்பத்தி மையங்கள், ஈரானின் ராணுவ தளங்கள், ராணுவ குடியிருப்புகள் மற்றும் யுரேனியம் செறிவூட்டும் மையம் ஆகியவற்றை அளிக்க முயற்சி மேற்கொண்டது. ஈரான்-இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்கா காரணம் மற்றும் இஸ்ரேலின் அணு சக்தி சார்ந்த உட்கட்டமைப்பிற்கு அமெரிக்கா தான் ஆதரவு தெரிவிக்கிறது என செய்திகள் பரவி வந்த நிலையில் டிரம்பும் ஈரானின் மீது கோபம் கொண்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு நாங்கள் காரணமில்லை, பிராந்தியத்தில் அமெரிக்க படைகளை காப்பதே எங்கள் முன்னுரிமை, இந்த தாக்குதலுக்கும்  அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலன் மீது கிரி வைக்க கூடாது என எச்சரித்துள்ளார் மார்கோ.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram