மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பிரச்சனையா?? அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற பூகெட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குத் புறப்பட்ட ஏர் இந்தியா AI 379 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக மீண்டும் பூகெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விமானத்திற்குள் இருந்த 156 பயணிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் இன்று காலை 9:30 மணியளவில் பூகெட்டிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில், விமானக் குழுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். Flightradar24 விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் அந்தமான் கடலைச் சுற்றி வட்டமடித்து, பாதுகாப்பு காரணமாக தாய்லாந்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளும், ஏர் இந்தியா குழுவும் அவசர நிலைத்திட்டங்களின்படி பயணிகளை சுறுசுறுப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றினர். மிரட்டலுக்கு காரணமான எந்தவொரு வெடிகுண்டும் விமானத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.

விமானத்திலிருந்த 156 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்தச் சம்பவம், கடந்த நாளே அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா AI 171 விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. அப்போது 241 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram