அனிருத் – காவ்யா மாறன் திருமணம்!! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா???

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது 34 வயதில் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய கட்டத்தை நோக்கிச் செல்கிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு திருமணம் குறித்து பல வருடங்களாகவே பேச்சு நடைப்பெற்று வந்த நிலையில், இப்போது தனியார் வட்டாரங்களில் ஒரு முக்கியமான தகவல் பரவுகிறது. அது என்னவென்றால், நடிகை மற்றும் Sun Pictures நிறுவனர் கலாநிதி மாரனின் மகளான காவ்யா மாரனுடன் அவருக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்பது தான்!

காவ்யா மாறனுக்கு தற்போது 32 வயதாகிறது. இளம் வயதில் தொழில்துறையில் சாதனையாற்றி வருபவராகவும், ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அறியப்படுகிறார். அவரும் அனிருத்தும் சமீப காலமாக நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்பதும், இருவரது குடும்பங்களும் இந்த தொடர்பை திருமணமாக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்பதும் கூறப்படுகிறது. அனிருத் மற்றும் காவ்யா தரப்பிலிருந்தும் இந்த உடன்பாட்டை ‘நல்ல சம்பந்தம்’ என பார்வையிடப்பட்டு, வருங்காலத்துக்கான திட்டங்கள் பேச்சுவார்த்தை நிலைமையில் உள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இருவரும் மீடியாவிடம் இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை. ஆனால், இந்தக் கிசுகிசு சினிமா வட்டாரங்களில் மட்டுமில்லாமல், தொழில்துறையிலும் பரவிவருவது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் ரசிகர்களும், சன் நெட்வொர்க் நிறுவன ரசிகர்களும் இந்த செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் ஒருங்கிணைந்த அறிவிப்போடு இரு குடும்பங்களும் வெளிப்படையாக இந்த நற்செய்தியை பகிர்ந்தால், அது 2025-இல் மிகப் பெரிய பிரபலங்களின் திருமண நிகழ்வாக அமையும் என்பது உறுதி.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram