பூஜை முடித்துவிட்டு திரும்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!திருச்சியில் பரிதாபம்!!!

திருச்சி : ஒரு பக்தி பயணம், ஒரு புதிய ஆரம்பம் எனக் கருதி கோயிலுக்கு வந்த ஒருவரின் வாழ்க்கையில், ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக வாங்கிய சொகுசு காருக்கு பூஜை செய்து வீடு திரும்பியவரால், ஒரு பக்தரன உயிரிழப்பு நேர்ந்தது. திருச்சி சமபும் மாரியம்மன் கோயில் அருகே நடந்த ந்த சம்பவம், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூஜை முடித்துக்கொண்டு காரை திருப்ப முயன்ற ஓட்டுநர், கரூர் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன், சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த 40 வயது பக்தர் ஒருவரை வனிக்காமல் கார் ஓட்டியுள்ளார். அந்த பக்தர் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு ஓய்வெடுக்க சாலையோரம் படுத்திருந்தார். சர்வதேச தரத்திலான சொகுசு கார், அடர்ந்த இருளில் ஓட்டப்பட்டபோது, ஓட்டுநரால் அந்த நபர் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

காரின் சக்கரங்கள் அவரது தலையில் ஏறி இறங்கியதில், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த சில பக்தர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சமயபுரம் போலீசார் உடலை மீட்டு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம் போல கருதப்பட்ட காரின பயணம், ஒருவரின் வாழ்க்கை முடிவதற்கான ஊர்வலமாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, காவல்துறை, கோயில் நிர்வாகம், பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram