ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய அப்டேட் எப்போது?? மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், தனது கடைசி திரைப்படமாக இருக்கும் ‘ஜனநாயகன்’ மூலம் திரை உலகிற்கு சினிமா நடிகராக விடை கொடுக்க இருக்கிறார். எச்.வினோத் இயக்கும் இப்படம், விஜயின் புதிய அரசியல் பயணத்திற்கு முக்கிய கட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அசாதாரணமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. இது ஒரு அரசியல் தளமையில் நகரும் சமூக கருத்துக்களை கொண்ட படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் பாபி டியோல் பிரமாண்டமாக நடிக்கிறார். மேலும், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு பெரிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட இருக்கிறது. இது படத்தின் விஷுவல் டோனையும், விஜயின் வேடத்தையும் முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் அவரது பிறந்த நாளிலேயே வெளியானது. அதேபோல், ‘ஜனநாயகன்’ glimpse க்கு மேலும் அபார வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்ற செய்தியும் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ வெறும் ஒரு திரைப்படம் அல்ல, இது விஜயின் திரை உலகில் இருந்து அரசியலுக்கு செல்கின்ற ஒரு முக்கியமான கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram