Vadigan: உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ மதங்களுக்கும் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடர்ந்து பல நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து உடல்நிலை மிகவும் கடுமையாக நிலைக்கு செல்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு நிமோனியா மற்றும் நுரையீரல் வியாதிகள் உள்ளது என்று கூறுகின்றனர்.
மேலும் சிறுநீர் தொற்று வியாதி கண்டறியப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது 88 ஆண்டாகிறது. இவர் இறந்தால் என்ன நடக்கும்.. முதலில் வாடிகன் நகரின் வருவாய் மட்டும் சொத்து நிர்வாகி போப் ஆண்டவரின் இறப்பை உறுதி செய்வார். அதனை போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடலின் அருகில் சென்று மூன்று முறை அவரின் பெயரை உச்சரிப்பார் அவர் எந்த பதிலும் கூறாத நிலையில் அவரின் மரணத்தை உறுதி செய்வார்.
பின்பு உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு போப் பிரான்சிஸ் ஆண்டவர் இறந்த செய்தியை தெரிவிப்பார். பின்பு உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் மணிகள் ஒலிக்கும் பிறகு போகாண்டவர் வசிக்கும் இல்லம் பூட்டப்படும். போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு நான்கு முதல் ஆறு நாட்களுக்குள் அடக்கம் செய்ய வேண்டும்.
மற்றும் போப் ஆண்டவரின் ஆட்சி முடிவதை உறுதி அளிக்கும் விதமாக அவருடைய மோதிரம் மட்டும் அவரின் முத்திரையும் அளிக்கப்படும். பின்பு உலகம் முழுவதும் அவருடைய இறந்த துக்கத்தை ஒன்பது நாட்கள் வரை அனுசரிக்கப்படும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நலம் சரியாகி மீண்டும் வருவாரா? அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.