குழந்தை குடிக்கும் பாலில் கலப்படம்!! தென்காசியில் அரங்கேறிய அடுத்த கொடுமை!!

சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம் சிறிதும் தாளாது அடுத்த பிரச்சனை பூகம்பமாய் கிளம்பி உள்ளது. பச்சை குழந்தை முதல் முடியாதவர்கள் பெரியவர்கள் வரை தினமும் புழங்கும் பாலில் ரசாயன பொருட்களை கலந்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து ஆயிரம் லிட்டர் பால் தினமும் விற்பனைக்கு செல்வதாகவும், அதில் ரசாயன வாடை வருவதாகவும் அந்த கம்பிளைனில் கூறப்பட்டுள்ளது. அதனை அறிந்து விரைந்த உணவு பாதுகாப்புத்துறை ரசாயன பால் தயாரித்திருந்த முப்பிடாதி, லட்சுமி ஆகியோரையும், ரசாயன பால் பவுடர் கொடுத்து வந்த கோமதி சங்கரையும் கைது செய்துள்ளனர். மேலும், அங்கு காணப்பட்டுள்ள 300 லிட்டர் ரசாயன பாலை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரசாயன பாலை கேள்விப்பட்ட அப்பகுதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அந்த சாம்பிள் முடிவு தெரிந்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram