திமுகவை கிண்டல் செய்த இபிஎஸ்!! போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய மர்ம கும்பல்??

சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்துள்ளார். மேலும் திமுகவின் 4 ஆண்டு சாதனை பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகுந்த மர்ம நபர்கள் காவலர்களை தாக்கி மற்றும் காவல் நிலையத்தை சூறையாடி விட்டு சென்றுள்ளனர். இந்தச் செய்தியை கேள்விப்பட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமாரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். மேலும் இந்த தாக்குதலில் காயம் அடைந்த காவலரையும் சென்று பார்க்குமாறு கூறியிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார் சம்பவ இடத்திற்கு செல்லும் வழியில் காவல்துறையினர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதை வன்மையாக அதிமுக கண்டிக்கிறது. திமுக ஆட்சியில் மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என்று  இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. மேலும் காவல்துறையை முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருப்பதினால் இச்சம்பவத்தை அவர் மூடி  மறைக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்சி உள்ளார்.

மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்து தக்க தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் திமுக ஆட்சி தமிழகத்தில் ஒழியும் வரை நமக்கு நாம்தான் பாதுகாப்பு என்று எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சித்துள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram